Coimbatore Blog

Coimbatore News

Share

Horai in tamil, எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?

எந்தெந்த ராசிகளுக்கு எந்த ஹோரைகள் அனுகூலத்தைக் கொடுக்கும்?

Horai in Tamil
ஹோரை என்பது ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய நேரம். நவக்கிரகங்களில் ராகு கேது சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மீதம் இருக்கக்கூடிய ஏழு கிரகங்களுக்கும் தினமும் நான்கு மணி நேரம் தங்களுடைய கதிர்வீச்சை செலுத்துவதாக ஓர் கணக்கை நமது முன்னோர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.
பொதுவாக புதன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகளில் நல்ல காரியங்கள் தொடங்கலாம். அதேபோல் வளர்பிறையில் சந்திரனுடைய ஹோரையும் நல்ல காரியங்களுக்கு எடுத்துக்கொள்ளலாம்.

எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்?

மேஷம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் மற்றும் குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.

ரிஷபம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் இவர்களுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். குரு மற்றும் சுக்கிர ஹோரைகளில் சுப நிகழ்ச்சிகளை ஆரம்பிப்பது அனுகூலத்தைக் கொடுக்கும். புதிய வீடு - மனை - வாகனம் - ஆடை - அணிகலன்கள் வாங்குவதற்கு இவர்கள் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சுக்கிர ஹோரையில் இவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் சீக்கிரமே நோய் குணமடையும்.

மிதுனம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

சந்திரன் - புதன் - குரு - சுக்கிரன் ஹோரைகள் நன்மை தரும். புதிய முயற்சிகள் - கல்வி - தொழில் - உத்தியோகம் - வீடு - மனை வாங்குவது போன்றவற்றை புதன் ஹோரையில் செய்தால் வேகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளை குரு மற்றும் சுக்கிர ஹோரையில் ஆரம்பிப்பது அல்லது செய்வதன் மூலம் நல்லபடியாக முடியும்.

கடகம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.

சிம்மம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சூரியன் - சந்திரன் - குரு ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு சூரிய ஹோரை நன்மை பயக்கும்.

கன்னி ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிர ஹோரையில் சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுக்க இயலும். அரசு சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரை நன்மை பயக்கும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரையையும் - பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையையும் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.

துலாம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் செவ்வாய் - புதன் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். செவ்வாய் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சந்திர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும் நன்மை தரும்.

விருச்சிகம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சந்திரன் - குரு - சுக்கிரன் ஆகிய ஹோரைகள் மிகுந்த அனுகூலத்தைக் கொடுக்கும். கல்வி - வேலை - பூமி சம்பந்தமான காரியங்கள் - வாகனம் சம்பந்தமான முயற்சிகள் அனைத்திற்கும் சுக்கிர ஹோரையை பயன்படுத்துவதால் நன்மைகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளுக்கு குரு ஹோரை நன்மை தரும்.

தனுசு ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - குரு ஹோரைகள் உத்தமம்.

மகரம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.

கும்பம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சந்திரன் - செவ்வாய் - புதன் - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். சுக்கிரன் ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கும் - கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - சுக்கிரன் ஹோரைகள் உத்தமம். குடும்பம் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு புதன் ஹோரை நன்மையைத் தரும்.

மீனம் ராசிக்கு அனுகூலத்தைக் கொடுக்கும் ஹோரைகள்

பொதுவில் சூரியன் - செவ்வாய் - குரு - சுக்கிர ஹோரைகள் இவர்களுக்கு அனுகூலத்தைக் கொடுக்கும். குரு ஹோரையில் சுபநிகழ்ச்சிகள் - சொத்து சார்ந்த இனங்கள் - அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் செய்தால் நல்லது. பணம் சார்ந்த விஷயங்களுக்கு சுக்கிர ஹோரையும், கல்வி சார்ந்த விஷயங்களுக்கு புதன் ஹோரையும் நன்மை தரும். தொழில் சார்ந்த முடிவுகளுக்கு செவ்வாய் - புதன் - குரு ஹோரைகள் உத்தமம்.
Horai in Tamil
எந்த ஒரு முகூர்த்த நிர்ணயம் என்றாலும் ஹோரைக்கு லக்ன தோஷமோ திதி தோஷமோ கிழமை தோஷமோ நட்சத்திர தோஷமோ ராகு கால தோஷமோ கரிநாள் தோஷமோ கிடையாது.

சுப ஹோரை - Subha Horai in Tamil
Hits: 2427, Rating : ( 5 ) by 1 User(s).